This Article is From Feb 19, 2019

‘’பாமகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவுக்குதான் பாதிப்பு ஏற்படும்’’ – திருமாவளவன் பேட்டி

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. வரவிருக்கும் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

‘’பாமகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவுக்குதான் பாதிப்பு ஏற்படும்’’ – திருமாவளவன் பேட்டி

அதிமுகவுடன், பாமக கூட்டணி வைத்திருப்பதை திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ஜெயலலிதா கொள்கைகளை அதிமுக மீறியதாக திருமா விமர்சனம்
  • பாமக உடனான கூட்டணியால் அதிமுகவுக்கு பலன் இல்லை
  • விசுவாசமே இல்லாத கட்சி பாமக என்கிறார் திருமாவளவன்

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. சென்னையில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் பாமக – அதிமுக இடையே தேர்தல் உடன்படிக்கை எற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

இந்தியாவில் எந்தவொரு விசுவாசமும் இல்லாமல் கூட்டணி வைக்கக் கூடிய கட்சி பாமக. இது எந்தவகையிலும் அதிமுகவுக்கு பலன் அளிக்கப் போவதில்லை.

பாமக வழக்கமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும், விமர்சிக்கும். தேர்தல் நேரத்தில் இரு கட்சிகளிடமும் பாமகவினர் பேரம் பேசுவார்கள். யாரிடத்தில் பேரம் படிகிறதோ அவர்களிடம் கூட்டணி வைப்பார்கள்.

2009-ல் பாமகவுடன் கூட்டணி வைத்து அதிமுக படுதோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதன்பின்னர் 2011, 2014 தேர்தல்களில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூட பாமக அழைக்கப்படவில்லை.

இன்று ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளது. இது அதிமுகவுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்தும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.