This Article is From Oct 08, 2018

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கு உதவும் தொழில் நுட்பங்களை உருவாக்கியதற்காக அமெரிக்கர்கள் 2 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கு உதவும் தொழில் நுட்பங்களை உருவாக்கியதற்காக அமெரிக்கர்கள் 2 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Stockholm:

சுவீடன் நாட்டை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் ஒவ்வோராண்டும் சாதனை படைப்பர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

2018- ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, வேதியியல், இயற்பியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோர் பகிர்ந்து கொள்கின்றனர்.

பருவ நிலை மாற்றம் சார்ந்த ஆய்வு மேற்கொண்டது, நீண்ட கால அடிப்படையில் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் தொழில் நுட்பங்களை உருவாக்கியது ஆகியவற்றுக்காக நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

இவர்கள் ரூ. 6.5 கோடி மதிப்பிலான பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

.