This Article is From Aug 12, 2018

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ் நைப்பால் மறைவு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் வித்யாதர் சூராஜ்பிரசாத் நைப்பால் இயற்கை எய்தினார்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ் நைப்பால் மறைவு
London:

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் வித்யாதர் சூராஜ்பிரசாத் நைப்பால் தனது 85 வயதில் இயற்கை எய்தினார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். நைப்பாலின் மறைவுக்கு இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பிரமூகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டிரினிடாடில் பிறந்த நைப்பாலின் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆவர். உதவி தொகை கொண்டு ஆக்சுவோர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படித்த இவர், பல நூல்களை இயற்றியுள்ளார்.

ஆக்சுவோர்டில் படித்து கொண்டிருக்கும் போது, நிதி நெருக்கடியிலும் தனிமையாலும் பாதிக்கப்பட்ட நைப்பால், தனது முதல் மனைவி பாட்ரீஷியாவை சந்தித்துள்ளார். நைப்பாலின் இலக்கிய படைப்புகள் வெளிவர பாட்ரீஷியா ஆதரவாக இருந்து வந்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு புற்று நோய் பாதிப்பால் பாட்ரீஷியா காலமானார். அதனை தொடர்ந்து, நதிரா அல்வி என்ற பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை நைப்பால் திருமணம் செய்து கொண்டார்.

புதினங்களும், பயனநூல்களும் பல எழுதி உள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். பயணங்களை விரும்பிய நைப்பால்,பெரும்பாலும் பல நாடுகளுக்கு சென்று பயணநூல்கள் எழுதியுள்ளார்.

வி.எஸ் நைப்பால், 30க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியுள்ளார். கடந்த 1961 ஆம் ஆண்டு, ‘எ ஹவுஸ் ஆப் மிஸ்டர் பிஸ்வாஸ்’ என்ற நூல் உலகப் புகழ் பெற்றது.

2018 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 11 ஆம் தேதி, 85 வயதில் நைப்பால் இயற்கை எய்தினார் என்று அவரது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

.