This Article is From Mar 06, 2019

‘அதிமுக-வில் யாருக்கும் துணிச்சல் இல்லை..!’- கொதிகொதிக்கும் கட்சி எம்.பி

2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்வர் ராஜா.

Advertisement
தமிழ்நாடு Written by

பாஜக-வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் அன்வர் ராஜா, கட்சியிலிருந்து விலகுவார் என்று கூறப்பட்டது

2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்வர் ராஜா. அதிமுக-வுக்கு உள்ளே இருந்து கொண்டே பாஜக-வுக்கு எதிராக அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர். இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று சொல்லி வந்தவர்களில் அவரும் ஒருவர். குறிப்பாக பாஜக-வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் அன்வர் ராஜா, கட்சியிலிருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், ‘அதிமுக-வில் இப்போது தலைமை பொறுப்பில் இருக்கும் யாருக்கும் துணிச்சல் இல்லை' என்று அதிரடியாக பேசியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று துணிச்சலாக சொல்லி 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக-வை அமோக வெற்றி பெற வைத்தார். அப்போது அவருக்கு இருந்த துணிச்சல் இப்போது அதிமுக-வில் யாருக்கும் இல்லை. ஏன் இந்தியாவிலேயே அவருக்கு இருந்த துணிச்சல் யாருக்கும் இல்லை' என்றார். 

‘கட்சியிலிருந்து விலகப் போவதாக வரும் தகவல்கள்' குறித்து பேசிய அன்வர் ராஜா, ‘நான் அதிமுக-விலிருந்து விலக வாய்ப்பே இல்லை. நான் யாரையாவது வெளியே அனுப்புவேனே தவிர, நான் வெளியேற மாட்டேன். எனக்கு கட்சித் தலைமை மீது எந்த வித அதிருப்தியும் இல்லை. விலகுவதற்கான பேச்சுக்கே இடமில்லை' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

Advertisement


 

Advertisement