This Article is From Sep 21, 2019

பேருந்து ஓட்டுநருக்கு 'ஹெல்மெட் அணியவில்லை' என அபராதம்...!

இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “ சீட் பெல்ட் போடவில்லை என்பதற்கு பதிலாக தவறுதலாக ஹெல்மெட் அணியவில்லை என்று குறிப்பிட்டு விட்டோம்” என்று கூறியுள்ளனர்.

பேருந்து ஓட்டுநருக்கு 'ஹெல்மெட் அணியவில்லை' என அபராதம்...!

பேருந்து ஓட்டுநர் ‘ஹெல்மெட் அணியவில்லை’ என்ற காரணத்திற்காக ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டது

நொய்டாவில் உள்ள தனியார் பேருந்து ஓட்டுநர் ‘ஹெல்மெட் அணியவில்லை' என்ற காரணத்திற்காக ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

டெல்லி நகரப்பகுதியை சேர்ந்த நிரங்கர் சிங் சொந்தமாக ட்ராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 முதல் 50 பேருந்துகள் உள்ளன. அவையாவும் நொய்டா மற்றும் க்ரேடர் நொய்டாவில் உள்ள பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக செயல்பட்டு வருகிறது. 

கடந்த 11-ம் தேதி நிராங்கர் சிங்கின் பஸ் ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறி பேருந்து ஓட்டியதாக போக்குவரத்து காவல்துறை இணைய மூலமாக ரசீது அனுப்பியுள்ளது. அதை பார்த்த நிராங்கர் சிங் அதிர்ச்சி  அடைந்துள்ளார். 

ஏனென்றால் பஸ் ஓட்டுநர் தலைக்கவசம் இல்லாமல் ஓட்டியதற்காக ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய நிரங்கர் சிங் “எனக்குச் சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது. விதிமீறல் குறித்த விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.” என்று கூறினார். 

இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “ சீட் பெல்ட் போடவில்லை என்பதற்கு பதிலாக தவறுதலாக ஹெல்மெட் அணியவில்லை என்று குறிப்பிட்டு விட்டோம்” என்று கூறியுள்ளனர்.

ஆனால் லாரி உரிமையாளர் “நான் சாதாரணமாக இதை விடப்போவதில்லை என்றும் போக்குவரத்து துறையினர் எவ்வாறு பொறுப்பற்றூ இருக்கிறார்கள் என்பது இதைக் காட்டுகிறது. எனக்கு தீர்வு கிடைக்க நான் நீதிமன்றம் செல்வேன்” என்று தெரிவித்தார். 

.