சீனாவின் வுஹான் பகுதியில் முதன் முதலாக ஏற்பட்ட கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
ஹைலைட்ஸ்
- தோல் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!
- டெல்லியில் ஐபிஎல் உட்பட விளையாட்டு போட்டிகள் தடை
- இத்தாலி சென்று திரும்பியதால் வைரஸ் அறிகுறி
Noida: டெல்லி அருகே நொய்டாவில் உள்ள தோல் உற்பத்தி தொழிற்சாலையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த தொழிற்சாலை கிருமிநாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஏறத்தாழ 700 ஊழியர்களை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த 46 வயது நபர், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக உள்ள இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளார். தொடர்ந்து, அவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என உத்தரப் பிரதேச தலைமை மருத்துவ அதிகாரி அனுராக் பார்கவ் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இதனிடைய, கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால், இந்தியா வருவதற்கான அனைத்து விசாக்களையும் வரும் ஏப்.15ம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
தொடர்ந்து, பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கும் படி, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம், வைரஸ் வேகமாக அனைவருக்கும் பரவும் என்பதால் அதனைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதனால், டெல்லியில் ஐபிஎல் உட்பட எந்த விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படாது என்று அறிவித்துள்ளது அம்மாநில அரசு.