This Article is From Oct 26, 2019

Noida Police: சாதியவாத கருத்துக்களை கொண்டிருந்த வாகனங்களுக்கு அபராதம்

தொந்தரவு இல்லாத போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் குற்றங்களை சரிபார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Noida Police: சாதியவாத கருத்துக்களை கொண்டிருந்த வாகனங்களுக்கு அபராதம்

குற்றங்களை சரிபார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (Representational)

Noida, UP:

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சாதி, ஆதிக்கவாத கருத்துக்கள் அல்லது சேதமடைந்த நம்பர் பிளேட்டுகள் கொண்ட 250க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

கவுதம் புத்த நகர் முழுவதும் மாவட்ட காவல்துறையினர் நடந்து கொண்டிருக்கும் ‘ஆபரேஷன் க்ளீன்'இன் ஒரு பகுதியாக தொந்தரவு இல்லாத போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் குற்றங்களை சரிபார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகர்ப்புற வாகனங்கள் 100, கிராமப்புற வாகனங்கள் 33 ஆகியவை சாதியவாத கருத்துகள் கொண்டிருந்தன.

நகர்ப்புற வாகனங்கள் 78, கிராமப்புற வாகனங்கள் 13 ஆகியவற்றில் ஆதிக்கவாத கருத்துக்கள் இருந்ததாகவும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 56 வாகனங்களில் சேதமாகியுள்ள நம்பர் பிளேட்டுக்காகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு பாதுகாப்பு சோதனைகள் மற்றும் ரோந்துப் பணிகளை முடுக்கிவிட்டதால், முக்கிய நகைக் கடைகள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் சந்தைகளில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை காவல்துறையினர் சோதனைகளை மேற்கொண்டனர்.

சாதியவாத, ஆதிக்கவாத கருத்துக்களை ஊக்கப்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களிலும் இதேபோன்ற நடவடிக்கை தொடரும் என்று காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.