This Article is From Aug 22, 2018

கோவாவில் 8000 பேர் எழுதிய தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத வினோதம்

கோவா மாநிலத்தில் கணக்காளர் பணிக்காக 8,000 பேர் தேர்வு எழுதினர். 80 பணியிடங்களுக்கு நடந்த அந்தத் தேர்வில் அனைவருமே தோல்வி அடைந்தனர்

கோவாவில் 8000 பேர் எழுதிய தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத வினோதம்
Goa:

கோவா மாநிலத்தில் கணக்காளர் பணிக்காக 8,000 பேர் தேர்வு எழுதினர். 80 பணியிடங்களுக்கு நடந்த அந்தத் தேர்வில் அனைவருமே தோல்வி அடைந்தனர்.

தேர்ச்சி பெற 50 மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயம். ஆனால் ஒருவர் கூட 50 மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவா கணக்குப் பதிவு துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 7-ம் தேதி நடந்த தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

100 மதிப்பெண்களுக்கு 5 மணி நேரம் நடந்த தேர்வில், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் அக்கவுன்ட்ஸ் சம்மந்தமான கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்கள் நாளை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவதாக இருந்தது. ஆனால், யாரும் தேர்ச்சி பெறாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது மாநிலத்தின் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட பெரும் அவமானம் என்று ஆம் ஆத்மி கட்சியின் பொதுச் செயலாளர் பிரதீப் பட்கொயேங்கர் விமர்சித்துள்ளார். கோவா பல்கலைக்கழகத்துக்கும், வணிகத் துறை பட்டதாரிகளை உருவாக்கும் கல்லூரிகளுக்கும் இது பெருத்த அவமானம் என்றார் அவர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.