This Article is From Oct 30, 2018

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை

தமிழகம் மற்றும் புதுவையில் இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று ராயபுரம், மண்ணடி, மெரினா கடற்கரை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. இதேபோன்ற திருவள்ளூர் மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை காணப்பட்டது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வடகிழக்கு பருவமழை தொடர்பான விவரங்கள் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பாலச்சந்திரன் அளித்துள்ள பதிலில், “ தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவ மழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும். தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யும். வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு வலுப்பெற்று அதன் பின்னர் வட கிழக்கு பருவமழை தொடங்கி விடும். சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யக் கூடும் என்றார்.

.