This Article is From Sep 27, 2019

திரிபுரா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி! காங்கிரஸ் வாக்குகள் 18 சதவீதம் அதிகரிப்பு!!

காங்கிரஸ் சார்பாக ரத்தன் சந்திர தாஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வாங்கிய வாக்குகளை விட தற்போது 18 சதவீதம் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார்.

திரிபுரா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி! காங்கிரஸ் வாக்குகள் 18 சதவீதம் அதிகரிப்பு!!

பாஜக வேட்பாளர் மிமி மஜும்தார் வெற்றி பெற்றுள்ளார்.

Agartala, Tripura:

திரிபுராவில் பதர்காட் தனித் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் மிமி மஜும்தார் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 5,276 வாக்குகள் அதிகம் பெற்று எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். 

காங்கிரஸ் தரப்பில் வேட்பாளராக ரத்தன் சந்திர தாஸ் நிறுத்தப்பட்டிருந்தார். இடைத் தேர்தலில் அவர் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தாலும், முன்பு கடந்த ஆண்டு நடந்த தேர்தலை விடவும் அவரது வாக்கு 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 

பதர்காட் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த பாஜகவின் திலிப் சர்கார் கடந்த ஏப்ரல் மாதத்தின்போது உயிரிழந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியாக உள்ளதென அறிவிக்கப்பட்டு கடந்த 23-ம்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 

இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் 20,487 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 15,211 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் 9,105 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

கடந்த தேர்தலின்போது மறைந்த பாஜக எம்.எல்.ஏ. திலிப் சர்கார் 28,561 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த தேர்தலில் பாஜக வாக்குகள் 20,487 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

.