This Article is From Feb 22, 2019

பஞ்சம், உணவு பற்றாக்குறை... ஐநாவில் அமெரிக்காவை கைகாட்டும் வடகொரியா!

அமெரிக்கா வட கொரியாவை அணு ஆயுத தளங்களை அழிக்க வேண்டும் என்றும், வடகொரியா அமெரிக்காவிடம் பொருளாதார தடைகளை நீக்க கோரியும், 1950-53 வடகொரிய போருக்கு ஒரு சரியான முடிவை அறிவிக்க கோரியும் கோரிக்கைகள் வைத்துள்ளன.

பஞ்சம், உணவு பற்றாக்குறை... ஐநாவில் அமெரிக்காவை கைகாட்டும் வடகொரியா!

வடகொரியாவின் அறிக்கையில் 2017ல் 5.03 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி தற்போது 4 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்று கூறியுள்ளது.

2019ம் ஆண்டு வடகொரியா 1.4 மில்லியன் டன் உணவுப்பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. இதற்கு மோசமான வெப்பநிலை, பஞ்சம், வெள்ளம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவற்றை கூறியுள்ளது.

வட கொரிய ஆணையம் ஐநாவுக்கு அளித்துள்ள இரண்டு பக்க அறிக்கையில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபருடனான சந்திப்புக்கு முன்பாக இது வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா வட கொரியாவை அணு ஆயுத தளங்களை அழிக்க வேண்டும் என்றும், வடகொரியா அமெரிக்காவிடம் பொருளாதார தடைகளை நீக்க கோரியும், 1950-53 வடகொரிய போருக்கு ஒரு சரியான முடிவை அறிவிக்க கோரியும் கோரிக்கைகள் வைத்துள்ளன.

வடகொரியாவின் உணவு தட்டுப்பாட்டுக்கு உலக உணவு அமைப்பு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. வடகொரியாவின் அறிக்கையில் 2017ல் 5.03 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி தற்போது 4 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்று கூறியுள்ளது. 

2 லட்சம் டன் உணவுப்பொருள்களை இறக்குமதி செய்வதாக வட கொரியா தெரிவித்துள்ளது. ஒருநபருக்கு 550 கிராம் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுவந்ததாகவும் தற்போது உணவுப்பற்ராக்குறையால் அது 330 கிராம்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

மோசமான வானிலையோடு சேர்த்து அமெரிக்காவின் பொருளாதார தடை பெரிதும் வருத்துவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதனால் விவசாயத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

வடகொரியாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் மனிதநேய நடவடிக்கைகளை வடகொரியாவில் கட்டமைக்க அமெரிக்க தயாராக உள்ளதாக ஐநாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு வடகொரியா ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் முன்வைத்துள்ளனர்.

மனிதநேய நடவடிக்கைகள் மீறப்படுவதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வடகொரியாவில் அதிகரிப்பதாகவும் ஏற்கெனவே அமெரிக்க குற்றம் சாட்டியிருந்தது. 

வடகொரியாவுக்கு 50,000 டன்கள் கோதுமை வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. 

கிம் யுங் லீ எனும் வடகொரிய பிரதிநிதி கூறியுள்ள அறிக்கையில், "நாங்கள் இந்த இரண்டு பக்க அறிக்கை மூலம் உணவு கேட்கவில்லை. உரிமைகளை கேட்கிறோம். அமெரிக்காவை தடைகளை அகற்ற சொல்கிறோம்" என்றார்.

வியட்நாம் சந்திப்புக்கு முன் இப்படி ஒரு அறிக்கை மூலம் சர்வதேச அரசியலை பரபரப்பாக்கியுள்ளது வடகொரியா.

.