This Article is From Jan 04, 2019

"உள்நாட்டு விஷயங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம்" - எச்சரிக்கும் வடகொரியா

அமெரிக்க, வட கொரியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது

அமெரிக்க, வட கொரியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியாவின் செய்தித்தாளில் வெளியான செய்தியில் அமெரிக்கா வட கொரியாவின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும், பல பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இரு கொரிய நாடுகளுக்கு இடையேயான இணைப்பு நிகழ்ச்சியில் இரு நாடுகளுக்குமிடையே ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்த முடிவுகள் எடுக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் யோன்ஹப் தெரிவித்துள்ளது. இதற்கு புறக்காரணிகளே காரணம் என்றும் கூறியுள்ளது.

கடந்த வாரம் நடந்த சந்திப்புக்கு பின் இணைப்பு என்பது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல. இதில் பல புறத்தடைகள் தடுக்கின்றன என்று அமெரிக்காவை மறைமுகமாக தாக்கியிருந்தனர். மேலும் அமெரிக்கா கொரிய நாடுகளுடனான உற‌வில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக இரு நாட்டுத் தலைவர்களும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி, வட கொரியா, தன்னிடம் இருகும் அணு ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டது. அமெரிக்க தரப்போ, ‘வட கொரியா மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் படிப்படியாக நீக்கப்படும்' என்று கூறியது.

தற்போது கிம், "எங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்னவோ உண்மைதான். ஆனால் அதைத் தவிர அடுத்தக்கட்ட நகர்வுகள் எதுவும் நடக்கவில்லை'' என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்கா, இந்த மொத்த உலகத்துக்கும் முன்னிலையில் ஒரு விஷயத்தை எங்களுக்கு உத்திரவாதம் தந்துள்ளது. எங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் குறைக்கப்படும் என்று சொல்லியது. ஆனால், அதற்கு ஏற்றாற்போல் அதன் செயல்பாடு இல்லை. அமெரிக்கா, தனது சத்தியத்தைக் காப்பாற்றாமல் செயல்படுமேயானால், எங்கள் நாட்டு இறையாண்மையை நாங்கள் வேறு வழிகளில் பாதுகாக்க வேண்டி வரும்' என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.

.