பாதுகாத்துவரப்படும் வட கொரியா தலைவர் கிம் ஜாங் II வின் உடல்
Seoul: உலகில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் சிறந்து விளங்கிய(கும்) நாடுகளில் சில ரஷ்யா, க்யூபா, வியாட்நாம், வட கொரியா, சீனா ஆகும். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை முன் மொழிந்தது கார்ல் மாக்ஸாக இருந்தாலும், அதனை செயல் வடிவம் பெற வைத்தது லெனின்தான்.
1924 ஆம் ஆண்டு லெனின் உயிரிழந்த போது, அவரது உடலை அழுகாமல், பாதுகாத்துப் பதப்படுத்தி வைக்க உதவியது மாஸ்கோவில் உள்ள ‘லெனின் லாப்'. மனித உடல் இறந்து பல ஆண்டுகள் ஆகியும் அதனை எப்படி அழுகாமல் வைத்திருக்கின்றனர் என்பது அந்த லெனின் லாப் இரகசியமாகவே வைத்துள்ளது.
லெனின் அவர்களின் உடல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வாறே வியட்நாமின் கம்யூனிஸ்ட் தலைவர் ஹோ ஷி மின்ஹ் உடலும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை மற்றும் தாத்தாவின் உடலும் பாதுகாத்து வருகின்றனர்.
வியட்நாம் மற்றும் வட கொரியாவில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் வேறு வடிவு எடுத்திருந்தாலும், இந்த மூன்று தலைவர்களின் உடலையும் ஆண்டாண்டு காலமாக சீரமைத்து பாதுகாத்து வருவதில் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.
வட கொரியாவில் அதன் இரு தலைவர்களின் உடலை பராமரிக்க லெனின் லாப் உதவுவது இல்லை. மாறாக அவர்களின் உடல் எப்படி பராமரிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.
இது குறித்து புத்தகம் எழுதும் பெர்கிலி கூறுகையில், ‘பல ஆண்டுகள் பல விஞ்ஞானிகளுக்கு லெனின் லாப் பயிற்சி அளிக்கின்றது. ஆனால், அனைத்து இரகசியங்களும் அவர்களிடம் லெனின் லாப் விஞ்ஞானிகள் தெரிவிப்பதில்லை' என்றார்.
வியாட்நாம்மில் வட கொரியா தலைவர் கிம்
மம்மி போன்றவற்றியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது இந்த லெனின் லாப் தொழிற்நுட்பம். லெனின் உடலை பாதுகாத்தப் பின், வியட்நாம் போரில் அமெரிக்கா, வியட்நாம் மீது அதீத தாக்குதலில் ஈடுப்பட்டது. அப்போது பல கெமிக்கல்களை ஹனய் அருகிலுள்ள குகைக்கு மாற்றியது ரஷ்யா.
1990 யூ.எஸ்.எஸ்.ஆர் உடைந்த பின் அவர்களின் ஆராய்ச்சிக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போதுதான் வட கொரியாவின் கிம் II சங்க், கிம் ஜாங் II ஆகியோரின் உடலை பாதுகாக்கத் துவங்கினர்.
‘இந்த உடல்களை அதே நிலைமையில் பாதுகாக்க இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சில பராமரித்தல் முறைகள் தேவைப்படுகிறது' என்றார் யுர்சக்.
இந்த உடல்களை அதன் நிலையிலையே பாதுகாக்க என்ன கெமிக்கல், முறைகளை விஞ்ஞானிகள் கையாளுகின்றனர் என்பது மர்மமே. இதனை லெனின் லாப் வெளியிட மறுத்துள்ளது.
சில வல்லுநர்கள், சீனா தனது தலைவரான மாவ்-ஐ பராமரிக்க கையாளும் திட்டத்தை வட கொரியாவிடம் பகிர்ந்து இருக்கலாம் என்கின்றனர். சீனாவுக்கும் மாஸ்கோவுக்கும் இடையே நீடித்த அரசியல் கருத்து வேறுபாட்டால், சீனா தனது சொந்த விஞ்ஞானிகளை வைத்தே மாவ்-ன் உடலை பதப்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
லெனின் உடலை பராமரிக்க ஆண்டுக்கு 2,00,000 டாலர் செலவாகிறது என ரஷ்ய அரசு 2016 ஆம் ஆண்டு தெரிவித்தது. வட கொரியா தங்கள் இரு தலைவர்களின் உடலை பராமரிக்க எவ்வளவு செலவு செய்கின்றனர் என்று தெரியவில்லை.
பல அரசியல் மர்மங்கள் இடையே, இந்த அரசியல் தலைவர்களின் உடலை பதப்படுத்தபடுவதும் மர்மமாகவே நீடிக்கிறது.