வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை தொடங்கிய மழை விடாமல் இன்று இரண்டாவது நாளாக பரவலாக நீடித்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழை இன்று தொடங்குவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தொடங்கி படிப்படியாக வலுப்பெற்று உள் மாவட்டங்களில் பருவ மழை பெய்யும்.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது. தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 2 நாட்களுக்கு 3-ந்தேதி வரை தமிழகம் முழுவதும்கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.
ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.