வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில், வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்த அதி தீவிர டிட்லி புயலானது தற்போது தீவிர புயலாக மேற்கு வங்கம் மற்றும் கங்கை சமவெளி பகுதியில் நிலை கொண்டுள்ளதாது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.