This Article is From Sep 12, 2019

Northern White Rhino: மீட்கப்படுமா காண்டாமிருகம் இனம்? - உதவிக்கு வந்த அறிவியல்

Northen White Rhino: அறிவியல் முறையானது வெற்றி பெறும் என்ற பட்சத்தில் நார்தன் வெள்ளை காண்டாமிருகங்களை மீட்டெடுக்க முடியும்.

Advertisement
உலகம் Written by

Northen White Rhino: உலகில் 2 நார்தன் வெள்ளை காண்டாமிருகங்களே மீதியுள்ளது

உலகம் என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் சமமானது. ஆறு அடி மனிதனுக்கு இருக்கும் உரிமை தான் ஆறு இன்ச் புளுவிற்கும் உண்டு. ஆனால் மனித இனத்தின் பேராசையானது மற்ற ஜீவராசிகளை அளிக்க தூண்டுகிறது. அவ்வாறு மனித இனத்தின் பேராசைக்கு இரையான ஒரு விலங்கு இனம் தான் Northen White Rhino.

தற்போது வெறும் இரண்டு நார்தன் வெள்ளை காண்டாமிருகங்கள் தான் எஞ்சியுள்ளது. இதில் மிக பெரிய சோகம் என்னவென்றால் அந்த இரண்டு நார்தன் வெள்ளை காண்டாமிருகங்களும் பெண் பாலினம் ஆகும். இதனால் இந்த காண்டாமிருகம் இனமானது அழிந்துவிட்டதே என்றே கருதப்பட்டது.

கென்யாவின் ஓல் பெஜெத்தா கன்சர்வென்சியில் வசித்து வரும் கடைசி இரண்டு பெண் நார்தன் வெள்ளை காண்டாமிருகங்களின் பெயர் Fatu மற்றும் Najin. சூதன் என்னும் ஆண் நார்தன் வெள்ளை காண்டாமிருகம் கடந்த ஆண்டு இறந்தது.

Advertisement

காண்டாமிருகங்கள் ஹார்ன்களுக்காக மனிதனால் வேட்டையாடப்பட்டு அழிவை நோக்கி சென்றது. மனிதன் செய்த இந்த கொடுமையை மனிதனே சரி செய்யும் பொருத்து உதவிக்கு வந்தது அறிவியல்.

நார்தன் வெள்ளை காண்டாமிருகங்கள் அழிந்து விடும் என எண்ணியே அவற்றின் ஆண் பாலினங்களிடம் இருந்து விந்து சேகரிக்கப்பட்டிருந்தது. பெண் பாலின நார்தன் வெள்ளை காண்டாமிருகங்களிடம் இருந்து பெறப்பட்ட கருமுட்டையுடன் இந்த விந்து In-vitro fertilization மூலம் embryo உருவாக்கப்பட்டுள்ளது. அதனை Fatu மற்றும் Najin யில் செலுத்தி நார்தன் வெள்ளை காண்டாமிருகங்கள் இனத்தை காப்பாற்ற வழி உள்ளதா என விஞ்ஞானிகள் சோதிக்க உள்ளனர்.

Advertisement

இந்த In-vitro fertilization முறை இத்தாலியில் நடத்தப்பட்டது. உருவாக்கப்பட்டுள்ள இரண்டு embryo, லிக்விட் நைட்ரஜனில் தற்சமயம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவியல் முறையானது வெற்றி பெறும் என்ற பட்சத்தில் நார்தன் வெள்ளை காண்டாமிருகங்களை மீட்டெடுக்க முடியும். பல விலங்கினங்களை தெரிந்தே அழித்த மனித இனத்திற்கு இது ஓர் பிராயசித்தாமாக அமையும்.

Advertisement