New Delhi: நார்வே நாட்டின் பிரதமர் இயர்னா சோல்பிர்க், இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்று பயணம் வரவுள்ளார். இந்த அரசமுறை பயணத்தில் அவர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பல தரப்பு பிரச்னைகளைப் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்தியாவுக்கு வரும் இயர்னா, இந்தியா - நார்வே நாடுகளிடையே நடக்கும் வர்த்தக மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார். மேலும் தனது சுற்றுப் பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயிடுவையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சுற்றுப் பயணம் இரு நாடுகளிக்கிடையே உள்ள உறவை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டின் மூலம் இரு நாடுகளிடையே உள்ள பன்னாட்டு முதலீட்டை மேன்படுத்த உதவும் என்னும் கப்பல் கட்டுமானம், எரிவாயு நிறுவனங்கள் போன்ற துறைகளில் அதிகப்படியான முதலீடு செய்துள்ள நார்வேஜியன் நாட்டின் நட்புறவு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.