বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 26, 2019

இது சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல: அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவிக்கும் அதிர்ச்சி தரும் தகவல்

உண்மையில் பொருளாதாரம் மந்தமாகிறது... வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. மக்களின் வருமானம், அவர்கள் பெறும் ஊதியங்கள் குறைந்துள்ளன. அரசு பெறும் வருவாயும் குறைந்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • "It is India's great slowdown," Arvind Subramanian said
  • Arvind Subramanian earlier said India's GDP had been overestimated
  • The GDP has trended downwards for seven consecutive quarters
New Delhi:


இன்று நாடு எதிர்கொள்ளும் நிலை “ஒரு சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல”என்று நரேந்திர மோடி அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் NDTVயின் டாக்டர் பிரணாய் ராயிடம் நேர்காணலில் தெரிவித்தார். 

2011 மற்றும் 2016க்கு இடையிலான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2.5 சதவீத புள்ளிகள் மிகையாக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணி ஐ.ஐ.எம் அகமதாபாத் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி. ஒரு மணி நேரம் நீண்ட ஆழமான உரையாடலில் (எண்ணெய் அல்லாத) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விகிதங்கள் (முறையே 6 சதவீதம் மற்றும் 1 சதவீதமாக குறைந்துள்ளது) மூலதன பொருட்கள் தொழில் வளர்ச்சி (10 சதவீதம் குறைவு) மற்றும் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி வளர்ச்சி விகிதம் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 5 சதவீதத்திலிருந்து இப்போது 1 சதவீதம்) சிறப்பான குறியீடாக இருக்கலாம்.

 “ஏற்றுமதி புள்ளி விவரங்கள், நுகர்வோர் பொருட்களில் புள்ளி விவரங்கள், வரி வருவாய் புள்ளி விவரங்கள்.... நாட்டின் வளர்ச்சியின் வெளிப்பாட்டை  குறிப்பிடும் இந்த மதிப்பீடுகள் யாவும் மிகையாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2000, 2002 க்கும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்த போதிலும் இந்த குறியீடுகள் அனைத்தும் நேர்மாறனவை அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.

“இது ஒரு சாதாரண மந்தநிலை அல்ல... இது இந்தியாவின் பெரும் மந்தநிலை” என்று சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Advertisement

அரசாங்க தரவுகளின் படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளில் கீழ்நோக்கி சென்றுள்ளது. 2019/20 காலாண்டில் 2 சதவீதம் குறைந்து 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. 2018/19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 8 சதவீதமாக இருந்தது. 


 “முக்கியமான மதிப்பீடுகள் எதிர்மறையான வளர்ச்சியிலோ அல்லது நேர்மறையான வளர்ச்சி பகுதியிலோ உள்ளன. வளர்ச்சி, முதலீடு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வேலைகளுக்கு முக்கியமானது. சமூக திட்டங்களுக்கு அரசாங்கம் எவ்வளவு வருவாய் செலவழிக்க வேண்டும் என்பதும் ஒரு விஷயம்” 

உண்மையில் பொருளாதாரம் மந்தமாகிறது... வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. மக்களின் வருமானம், அவர்கள் பெறும் ஊதியங்கள் குறைந்துள்ளன. அரசு பெறும் வருவாயும் குறைந்துள்ளது. 

Advertisement

அரசாங்கம் பல காரணங்களுக்காக சுப்பிரமணியனின் ஆராய்ச்சியை விமர்சித்து, உற்பத்தித்திறன் மற்றும் நுகர்வு எழுச்சி வாதங்களை முன்வைத்து, நிலையான நுகர்வு தலைமையிலான வளர்ச்சியின் தனித்துவமான மாதிரியை இந்தியா உருவாக்கியிருந்தால், அது அதிக நுகர்வு பொருளாதாரத்தில் பிரதிபலித்திருக்கும் என்று கூறினார்.

கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி), மே மாதத்தில் கணக்கெடுப்பின்படி 48 சதவீதம் பேர் முந்தைய 12 மாதங்களில் பொது பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதாக உணர்ந்தனர்.

Advertisement