This Article is From Aug 03, 2020

மொழிக்கொள்கையை மட்டுமல்ல; கல்விக் கொள்கையையே தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன்  கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம்

மொழிக்கொள்கையை மட்டுமல்ல; கல்விக் கொள்கையையே தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மொழிக்கொள்கையை மட்டுமல்ல; கல்விக் கொள்கையையே தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கை பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.  

புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்கவே மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியட்டுள்ள அறிக்கையில், தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், அதிமுக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அதிமுக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. 

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பாரத பிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன்  கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.