This Article is From Jun 09, 2018

பிராண்ப் முகர்ஜி பேச்சில் இருந்து 10 முக்கிய மேற்கோள்கள்

நான் இங்கு, நம் நாட்டின் தேசியவாதம், நாட்டுப்பற்று குறித்த என்னுடைய புரிதலை பற்றி பேச வந்துள்ளேன்

பிராண்ப் முகர்ஜி பேச்சில் இருந்து 10 முக்கிய மேற்கோள்கள்

ஹைலைட்ஸ்

  • இந்தியாவின் ஆன்மா பன்முகத்தன்மையிலும், சகிப்புத்தன்மையிலும் உள்ளது
  • மதச்சார்பின்மை மற்றும் சேர்க்கை என்பது நமது நம்பிக்கை
  • கலப்பு கலாச்சாரம் நம்மை ஒரு நாடாக மாற்றுகிறது என்றார்
Nagpur: நாக்பூர் : ராஷ்டிரிய சுயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணப்முகர்ஜி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வரவேற்றார். பல புகைப்படங்கள், கைகுலுக்கல்கள் எனத் தொடர்ந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கான முழுநேர பிரச்சாரப் பணி செய்ய தொடங்கும் பணியில் சிறப்பு விருந்தினராக பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். ‘நான் இங்கு, நம் நாட்டின் தேசியவாதம், நாட்டுப்பற்று குறித்த என்னுடைய புரிதலை பற்றி பேச வந்துள்ளேன்” என்று தன் உரையைத் தொடங்கினார்

நிகழ்ச்சியில் திரு.பிரணாப் முகர்ஜி பேசியதிலிருந்து பத்து மேற்கோள்கள்
  • சகிப்புத்தன்மையில் இருந்துதான் நாம் வலுவடைகிறோம். பன்முகத்தன்மைகளை ஏற்றுக்கொண்டு அதனை மதிக்கிறோம். வேற்றுமைகளை கொண்டாடுகிறோம். நாம் ஒரே தேசம், ஒரே அடையாளம் இல்லை.
  • சகிப்புத்தன்மையின்றி, மதத்தின், இடத்தின், வெறுப்பின், அடையாளமாக இருப்பதினால் நம் தேசத்தின் அடையாளத்தை இழக்கிறோம்
  • இந்தியாவின் ஆன்மா பன்முகத்தன்மையிலும், சகிப்புத்தன்மையிலும் உள்ளது. பல நூற்றாண்டுகளாக கருத்துக்களின் சீரழிவு நம் சமூகத்தின் பன்முகத்தன்மைகளுக்கு வழிவகுத்துள்ளது
  • ஒரு மொழி, ஒரு மதம், ஒரு எதிரி என்பது இந்தியாவின் தேசியப்பற்று அல்ல. 1.3 பில்லியன் மக்களின் வற்றத பிரபஞ்சவாதம்
  • நாட்டில் அமைதி, நல்லிணக்கம் ஏற்பட, வன்முறை, மோதல், கோபம் ஆகியவற்றில் இருந்து நாம் விலகி நிற்க வேண்டும். நம் பாரதத்தாய் அதையே விரும்புகிறாள்.
  • மதச்சார்பின்மை மற்றும் சேர்க்கை என்பது நமது நம்பிக்கை. கலப்பு கலாச்சாரம் நம்மை ஒரு நாடாக மாற்றுகிறது
  • நம் அரசியல் அமைப்பில் இருந்து தேசியவாதம் பாய்கிறது. இந்திய தேசியவாதத்தின் கட்டமைப்பே அரசியலமைப்பின் நாட்டுப்பற்று
  • தினசரி, வன்முறைகள் அதிகரிப்பதை நாம் காண்கிறோம். அச்சம், இருட்டு மற்றும் அவநம்பிக்கையே வன்முறைகளின் முக்கிய புள்ளியாக உள்ளது
  • உடல் மற்றும் சொல் சார்ந்த வன்முறைகளில் இருந்து பொது மக்களை விடுவிக்க வேண்டும்
  • மக்களின் மகிழ்ச்சியிலேயே அரசரின் மகிழ்ச்சி இருக்கும், மக்களின் பொதுநலமே அரசரின் நலம்.

.