திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல, தமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு திமுக தான். 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு போட்டதன் முலம் திராவிட இயக்க கருத்துக்களை தக்க வைத்து கொண்டு இருக்கின்ற இயக்கமும், அதன் உண்மையான வாரிசாக இருக்கக்கூடிய இயக்கமாக திமுக இருப்பதை ஸ்டாலின் நிரூபித்து உள்ளார்.
உயர்வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு அளிக்கும் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது அதிமுக வெளிநடப்பு செய்ததில் இருந்தே, பாஜகவும், அதிமுகவும் கூட்டணியில் இணைய உள்ளதை காட்டுகிறது. அதிமுக அரசு மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல் அரசு வருவாயில் கவனம் செலுத்துகிறது. பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களின் வசூலை விட அரசாங்கத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது.
திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துவதை விமர்சிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.