This Article is From Aug 16, 2018

750 கோடி இழப்பீடு தொடர்பான ஐகோர்ட் நோட்டீஸ் இன்னும் கிடைக்கவில்லை: ஸ்டெர்லைட்

கலவரத்துக்குக் காரணமானவர்கள் என ஆறு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

750 கோடி இழப்பீடு தொடர்பான ஐகோர்ட் நோட்டீஸ் இன்னும் கிடைக்கவில்லை: ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் மாசுபாடு ஏற்படுத்தியதில் மீள்வாழ்வுப் பணிகளுக்காகவும்; ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும் சேர்த்து வேதாந்தா நிறுவனம் 750 கோடி இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இதற்கு பதிலளிக்குமாறு வேதாந்தா குழுமத்துக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அளித்திருந்தது.

இந்நிலையில் ஐகோர்ட் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் மும்பைப் பங்குச்சந்தைக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. மேலும் நோட்டீஸ் கைக்குக் கிடைத்ததும், அதில் உள்ளவற்றைப் படித்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது 13 பேர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் இதில் காயமடைந்தனர். இவ்வழக்கில் கடந்த செவ்வாய் அன்று ஐகோர்ட் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதில் கலவரத்துக்குக் காரணமானவர்கள் என ஆறு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.