அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆகக் குறைக்கத் திட்டம் ஏதும் இல்லை.
ஹைலைட்ஸ்
- முன்கூட்டிய ஓய்வு திட்டம் ஏதும் இல்லை.
- சில அசாதாரண சூழில் மட்டுமே அப்படியான ஓய்வு அளிக்கப்படும்.
- மத்திய அரசு ஊழியர்களின் பணிக்காலம் 60 ஆண்டுவரை என்பதில் மாற்றமில்லை
New Delhi: மத்திய அரசு பணியாளர்களின் பணிக்காலத்தை 60 வயதிலிருந்து 58 வயதாக குறைக்க எந்த திட்டமும் இல்லை என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆகக் குறைக்கத் திட்டம் ஏதும் இருக்கிறதா என்று மக்களவையில் கேள்வி கேட்டதற்கு இந்த பதிலினை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளனர்.
அடிப்படை விதிகள் 56 (ஜே) மத்திய குடிமை பணிகள்(ஓய்வூதியம்) விதிகள், 1972 மற்றும் அகில இந்திய சேவைகளின் விதி 16(3)(திருத்தப்பட்ட) விதிகள் (1958) அதன்படி, ஊழியர்கள் திறமைக்குறைவாகவோ அலல்து நேர்மைக் குறைவாகவோ இருந்தால் பொதுநலன் கருதி அவர்களை ஓய்வு வயதுக்கு முன்பு பணியில் இருந்து விலக்க அரசுக்கு முழு உரிமை இருக்கிறது. அவ்வாறு நீக்குவதற்கு முன் குறைந்தபட்சம் 3 மாத அவகாசம் எழுத்து மூலம் வழங்கப்படும் அல்லது 3 மாத ஊதியம் தரப்பட்டு நீக்கப்படுவார்கள்.இந்த விதிமுறைகள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.
அந்த அரசு ஊழியர் க்ரூப் ஏ அல்லது பி பிரிவில் பணியாற்றுபவராக இருந்தால், அவர் நிரந்தரப் பணியாளராகவும் அல்லது தற்காலிக நியமனமாகவும் இருந்தால் அவரின் வயது 35 வயதுக்கு முன்பாக அல்லது 50 வயதுக்கு மேல் இருந்தால் இந்த விதிகள் பொருந்தும். இடைப்பட்ட வயதில் இருந்தால், இந்த விதிகள் அந்த ஊழியர் 55 வயதை அடைந்த பின் இந்த விதிகள் பொருந்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.