This Article is From Feb 27, 2019

கட்டாய குறைந்தபட்ச ஊதிய திட்டத்துக்கு இவான்கா ட்ரப்பின் பதில்!

"நான் குறைந்த பட்ச ஊதியத்தை ஆதரிக்கிறேன். ஆனால் அது சாத்தியமானதா என்று என்னால் கூறமுடியவில்லை" என்றார் இவான்கா ட்ரம்ப்

கட்டாய குறைந்தபட்ச ஊதிய திட்டத்துக்கு இவான்கா ட்ரப்பின் பதில்!

"மக்கள், என்ன வேலை செய்கிறார்களோ அந்த வேலைக்கு ஏற்ற ஊதியத்தை தான் விரும்புகிறார்கள்" - ட்ரம்ப்

வெள்ளை மாளிகை ஆலோசகரும், அதிபர் ட்ரம்பின் மகளுமான இவான்கா ட்ரம்ப், செனட் உறுப்பினரான அலெக்ஸான்டரியோ ஒகாஸியோ கோர்ட்ஸின் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலை உத்திரவாத திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று வெளியான பேட்டியில் ட்ரம்ப் புதிய சுற்றுச்சூழல் ஒப்பந்தம், பருவநிலை மாற்றம், ஊதிய சமநிலையின்மை ஆகியவை குறித்த ஒகாஸியோ கோர்ட்ஸ் கருத்துக்கள் பற்றி பேசினார்.

அதில் ''அமெரிக்க மக்கள் அவர்கள் மனதார சில விஷயங்களை செய்ய விரும்புவதில்லை. நான் கடந்த நான்கு வருடங்களில் அமெரிக்காவின் பல பகுதிகளில் மக்களை சென்று சந்தித்திருக்கிறேன். அவர்கள் இந்த குறைந்தபட்ச ஊதியத்தை விரும்புவதில்லை. அவர்கள் என்ன வேலை செய்கிறார்களோ அந்த வேலைக்கு ஏற்ற ஊதியத்தை தான் விரும்புகிறார்கள். அவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

புதிய க்ரீன் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை ஒகாஸியோ கோர்ட்ஸ் மற்றும் சென் ஆகியோர் இந்த மாதம் விளக்கினர். அதில் பசுமைவாயு மற்றும் மாசு ஆகியவை அமெரிக்காவில் ஏற்படுத்தும் தாக்கம், அடுத்த 10 ஆண்டுகளில் ஊதிய சமநிலை மற்றும் குடும்ப சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து விளக்கினர். 

இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இவான்கா ட்ரம்ப் "நான் குறைந்த பட்ச ஊதியத்தை ஆதரிக்கிறேன். ஆனால் அது சாத்தியமானதா என்று என்னால் கூறமுடியவில்லை. இது மக்களின் வேலை செய்யும் எண்ணத்தை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது" என்று கூறினார்.

இந்த ட்விட் செய்யப்பட்ட 20 நிமிடத்துக்குள் பதிலளித்த ஒகாஸியோ '' மக்கள் இதை தான் விரும்புகிரார்கள். வாழ்வதற்கு தேவையான ஊதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும். இது பரிசு அல்ல அவர்களுக்கான மதிப்பு கூட்டு வசதி" என்றார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.