This Article is From Jan 23, 2019

''பிரியங்கா காந்தி நியமனம் எதிர்பார்த்த ஒன்றுதான்''- ரவிசங்கர் பிரசாத்

குடும்பத்தினருக்கு பதவிகளை அளித்து அவர்கள் மீது அக்கறை காட்டுவதாக காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

வாரிசு அரசியல் செய்வதாக ரவி சங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.

New Delhi:

பிரியங்கா காந்திக்கு கட்சியில் பொறுப்பு அளிப்பது என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், இதில் ஆச்சரியப்பட வேண்டியது எதுவும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில் கிழக்கு பகுதிக்கு பொதுச்  செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். 

இதுகுறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது-

காங்கிரசை பொறுத்தவரையில் ஒரு குடும்பத்துடைய நலனில் மட்டுமே அதிக அக்கறை காட்டும். அந்த வகையில்தான் பிரியங்காவுக்கு  பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை'' என்று கூறியுள்ளார். 

மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. 

.