This Article is From Feb 06, 2019

பெண் போல் பேசி சூழ்ச்சி செய்து ஆந்திராவில் என்.ஆர்.ஐ கொலை : திடுக் சம்பவம்

ராகேஷ் ரெட்டி என்பவரிடம் 4 கோடி ரூபாய் கடனாக வாங்கியுள்ளார் ஜெயராம்

பெண் போல் பேசி சூழ்ச்சி செய்து ஆந்திராவில் என்.ஆர்.ஐ கொலை : திடுக் சம்பவம்

ஜனவரி 31 ஆம் தேதி நந்தியகாமா அருகே தேசிய நெடுங்சாலையில் தனது காரின் பின் இருக்கையில் இறந்து நிலையில் கண்டெடுக்கப்பட்டார்

ஹைலைட்ஸ்

  • 4 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார் ஜெயராம்
  • ஜனவரி 31 ஆம் தேதி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜெயராம்
  • ராகேஷ் ரெட்டி மற்றும் அவரது டிரைவரை கைது செய்துள்ளனர் போலீஸ்
Vijayawada:

கோஸ்டல் பேங்க் இயக்குனரான ஜெயராம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நந்தியகாமா அருகே தேசிய நெடுங்சாலையில் தனது காரின் பின் இருக்கையில் இறந்து நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இது விபத்தா இல்லை கொலையா என போலீஸ் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இது கொலை தான் என போலீஸ் உறுதி செய்து கொலையாளிகலையும் கைது செய்துள்ளனர்.

ஜெயராம் சில வருடங்களுக்கு முன் எக்ஸ்பரஸ் டிவி என்னும் தெலுங்கு டிவி சேனலை நடத்தி வந்தார். அது தோல்வியால் மூடப்படவே, அமெரிக்கா சென்றார் ஜெயராம். அங்கு கோஸ்டல் பேங்க் இயக்குனராக இருந்தார் ஜெயராம். அவர், ராகேஷ் ரெட்டி என்பவரிடம் 4 கோடி ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

சென்ற வாரம் இந்தியா வந்த ஜெயராமிடம் தன் பணத்தை தருமாறு ராகேஷ் கேட்டுள்ளார். ராகேஷின் நம்பரை ப்ளாக் செய்துள்ளார் ஜெயராம்.

வேறு ஒரு நம்பர் மூலம் ஜெயராமிற்கு வாட்ஸ் ஆப் செய்துள்ளார் ராகேஷ். தான் ஒரு பெண் என்றும் ஜெயராமை தனிமையில் சந்திக்க விரும்புவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி ஜுப்லியில் உள்ள வீட்டிற்கு ஜெயராமை வர வைத்துள்ளார்.

அங்கு ஜெயராமிடம் 6 கோடி ரூபாயை தருமாறு கேட்டுள்ளார் ராகேஷ். ஆனால் தன்னிடம் 6 இலட்சம் தான் இருக்கிறது என ஜெயராம் கூறவே, ஜெயராமை தாக்கியுள்ளார் ராகேஷ். தலையில் ஏற்பட்ட காயத்தால் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் ஜெயராம்.

பின் ஜெயராமை தன் டிரைவர் ஸ்ரீனிவாஸ் உதவியுடன் காரில் ஏற்றி, ஜெயராம் விபத்தில் உயிரிழந்தது போல் காட்சிபடுத்தியுள்ளார் ராகேஷ்.

பல டோல் கேட்களில் இருந்த சிசிடிவி மூலம் விசாரித்து வந்த போலீஸ், ராகேஷ் மற்றும் அவரது டிரைவரை கைது செய்தனர். போலீஸ் அவர்களை மேலும் விசாரித்து வருகின்றனர்.   

.