This Article is From Feb 26, 2020

போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது; மக்கள் அச்சமடைய தேவையில்லை: அஜித் தோவால்

இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேற்றிரவு வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, எந்தவொரு சட்டத்தையும் மதிக்கும் குடிமகனும் யாராலும் பாதிக்கப்படமாட்டான் என்று கூறினார்.

போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது; மக்கள் அச்சமடைய தேவையில்லை: அஜித் தோவால்
New Delhi:

போதுமான அளவு வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பதால் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதுவரை இந்த வன்முறைக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேற்றிரவு வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, எந்தவொரு சட்டத்தையும் மதிக்கும் குடிமகனும் யாராலும் பாதிக்கப்படமாட்டான் என்று கூறினார். 

இதுதொடர்பாக அஜித் தோவால் என்டிடிவியிடம் கூறியதாவது, டெல்லி போலீசாரின் நோக்கத்தையும், திறன்களையும் மக்கள் சந்தேக்கின்றனர். முதலில் அது சரிசெய்யப்பட வேண்டும். சீருடையில் இருப்பவர்களை மக்கள் நம்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

டெல்லியில் வடகிழக்கு பகுதியில் வன்முறை வெடித்த போது, போதுமான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவில்லை என்றும், போலீசாரின் செயலற்ற தன்மை என்று டெல்லி காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  

சீலாம்பூர், ஜாஃபர்பாத், முஜ்பூர், கோகுல்பூரி உள்ளிட்ட வன்முறை ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

குடிமக்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பின்மை உணர்வு இருந்தது. எங்களை பொருத்தவரையில், அனைத்து சமூகங்களிடமிருந்தும் அச்ச உணர்வை அகற்ற விரும்புகிறோம் என்று தோவால் கூறியுள்ளார். 

மேலும், குற்றவாளிகள் அனைவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், டெல்லி சாலைகளில் யாரும் கையில் துப்பாக்கியுடன் சுற்ற முடியாது என்று அவர் கூறினார்.

.