This Article is From Jun 30, 2018

பாதரியார் மீது பாலியல் சீண்டல் புகார் அளித்த கன்னியாஸ்திரி

கன்னியாஸ்திரி ஒருவர், பாதரியார் ஒருவர் தன்னிடம் 13 முறை தவறான முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார்

பாதரியார் மீது பாலியல் சீண்டல் புகார் அளித்த கன்னியாஸ்திரி
Kottayam, Kerala:

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பாதரியார் ஒருவர் தனக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக, காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

தற்போது வட இந்தியாவில் கத்தோலிக்க சபை ஒன்றின் பாதரியாராக இருக்கும் அவர், தன்னிடம் 13 முறை தவறான முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். முதல் முறை குருவிலங்காடு என்ற பகுதியில் உள்ள விருந்துனர் இல்லத்தில், பாதரியார் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவர் கூறுகிறார்.

இது குறித்து பல முறை தான் பணி செய்து வந்த தேவாலயத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கிவில்லை. அதனால், போலீஸை நாடி வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், கன்னியாஸ்திரியின் புகாரை எதிர்த்து பாதரியார் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த கன்னியாஸ்திரி பெண்ணை வேறு இடத்துக்கு பணி மாற்றம் செய்ததால், தன்னை பழி வாங்கும் நோக்கில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கோட்டையம் பகுதியின் இணை எஸ்.பி இந்த புகார் மீது விசாரணை நடத்தி வருகிறார்.

.