தெலங்கானாவில் மகபூபாபாத் டவுனில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது
Mahabubabad, Telangana: தெலங்கானாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வந்த மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார் அவரது கணவன். மருத்துவனையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தெலங்கானாவில் மகபூபாபாத் டவுனில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கொல்லப்பட்ட செவிலியரும் அவரது கணவரும் தனித் தனியாக வாழ்ந்து வந்ததாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது. முன்னதாக செவிலியராக இருந்த அந்தப் பெண், தன் கணவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் உடல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
“பி.செவலால்வென்ட் என்னும் நபர்தான் இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மருத்துவமனையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார் செவலால்வென்ட்” என்று எஸ்.பி கோடி ரெட்டி கூறுகிறார்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.