திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் நுஸ்ரத் எம்.பியாக பதவியேற்பு.
New Delhi: நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகைகள் நுஸ்ரத் ஜஹான், மிமி சக்கரவர்த்தி ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் எம்.பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஷிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நுஸ்ரத் ஜஹான். இவரும் பிரபல தொழிலதிபர் நிகில் ஜெயினும் கடந்த 19 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இதில், மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு இளம் எம்.பியும் நடிகையுமான மிமி சக்ரவர்த்தியும் இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டார்.
இதனால், நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கி மற்ற எம்.பிக்கள் பதவியேற்கும் போது, இவர்கள் இருவரும் பதவியேற்கவில்லை. இந்நிலையில், இன்று வங்க மொழியில் பதவியேற்ற இருவரும், வந்தே மாதரம் மற்றும் ஜெய்ஹிந்த் கூறி உறுதிமொழி எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, இருவரும் சபாநாயகர் ஓம் பிர்லா பாதங்களை தொட்டு வணங்கினர். பின்னர் இருவரும் அவையை விட்டு வெளியே வந்த போது, அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். இதனால், வெளியேற முடியாமல் தவித்த அவர்கள் இருவரும் மீண்டும் அவைக்குள் சென்றனர்.
பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் வழி ஏற்பாடு செய்து தந்த பின் இருவரும் அவையில் இருந்து வெளியே வந்தனர்.
(With inputs from PTI and ANI)