நுஸ்ரத் ஜகான் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஹைலைட்ஸ்
- நுஸ்ரஸ் குங்குமம், வளையல் அணிந்ததற்காக விமர்சிக்கப்பட்டார்
- 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
- சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்
Kolkata: நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முறையாக பொறுப்பேற்றுள்ள பெங்காலி நடிகையும் அரசியல்வாதியுமான நுஸ்ரத் ஜஹான் “உள்ளடக்கிய இந்தியாவை” பிரதிநிதித்துவப் படுத்துவதாக வலியுறுத்தினார்.
நுஸ்ரத் ஜஹான் உச்சி வகிடில் மற்றும் நெற்றியில் பொட்டு வைத்த தோற்றத்துடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
”சாதி, மதம் ஆகியவற்றைத் தாண்டி ஒரு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்” என்று நுஸ்ரத் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
“நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்” என்றும் தான் இன்னும் ஒரு முஸ்லீமாகவே இருக்கிறேன் என்று கூறினார்.
“நான் இன்னும் முஸ்லீமாகவே இருக்கிறேன். நான் எதை அணிய வேண்டும் என்பது குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது. ஒன்றின் மீதான நம்பிக்கை உடையை தாண்டியது. மதத்தின் விலைமதிப்பற்ற கோட்பாடுகளை மட்டுமே வாழ்க்கையில் பின்பற்றுகிறேன்” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பதவியேற்வு விழாவில் இஸ்லாமிய தன்மையுடன் உடை அணியவில்லை என்று முஸ்லீம் அமைப்பு ஒன்று ஃபட்வா வழங்கியது என்று ஐஏஎன்எஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
“எந்தவொரு மதத்தின் அடிப்படைவாதிகளுக்கும் பதில் சொல்லத் தொடங்கினால் அது வெறுப்பையும் வன்முறையையும் மட்டுமே வளர்க்கும். வரலாறு அதற்கு சான்றளிக்கிறது என்று நுஸ்ரத் ஜஹான் தெரிவித்தார்.
ஜூன் 19 அன்று துருக்கியில் நிகில் ஜெயின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிட்டத்தக்கது.