This Article is From Feb 08, 2019

‘தமிழக அரசை வழிநடத்தும் ஒளி ஜெயலலிதா!’- பட்ஜெட்டில் ஒபிஎஸ் புகழாரம்

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

‘தமிழக அரசை வழிநடத்தும் ஒளி ஜெயலலிதா!’- பட்ஜெட்டில் ஒபிஎஸ் புகழாரம்

ட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் ஜெயலலிதா உருவம் பொறித்த சூட் கேஸுடன் பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்ற வளாகத்துக்குள் ஒன்றாக நுழைந்தனர். 

Chennai:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஆளும் அதிமுக அரசு தனது பட்ஜெட்டை அவருக்குத்தான் சமர்பித்துள்ளது. தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது அவர், ‘தமிழக அரசை வழிகாட்டும் ஒளி ஜெயலலிதாதான்' என்று புகழாரம் சூட்டினார். 

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் ஜெயலலிதா உருவம் பொறித்த சூட் கேஸுடன் பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்ற வளாகத்துக்குள் ஒன்றாக நுழைந்தனர். 

அப்போது அவையிலிருந்து அதிமுக-வினர் தங்களது மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். சிரித்த முகத்துடன் தனது இருக்கைக்கு வந்த ஓபிஎஸ், பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார். அப்போது ஜெயலலிதா பற்றி புகழ்ந்து பேசினார். அவர் ஜெயலலிதாவின் குணத்துக்கு திருக்குறளை மேற்கோள் காட்டினார். 

அவர் தொடர்ந்து பேசும்போது, ‘ஜெயலலிதா இந்த உலகை விட்டு மறைந்திருந்தாலும், கோடான கோடி தமிழர்களின் உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார். அவரால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி, தொடர்ந்து மக்களுக்காக சேவையாற்றும். 

ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அவர் வகுத்தத் தந்த பாதையில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வருகிறார். ஜெயலலிதாவின் ஆசி என்றும் எங்களுக்கு அவசியம்' என்றார். 

.