கிராமத்தில் பாதுகாப்புக்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். (Representational)
Agar Malwa: மத்திய பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மணமகன் குதிரை மீது ஏறி திருமண ஊர்வலம் சென்றதற்காக தாக்கியுள்ளனர். டிசம்பர் 1 இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தர்மேந்திர லுஹரின் திருமணத்திற்கு முந்தைய ஊர்வலத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமண ஊர்வலம் கிராமத்தின் ஒரு பகுதி வழியாக சென்றபோது ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த சிலர் திருமண வீட்டினர் மீது கற்களை வீசி, லுஹார் குதிரையில் ஊர்வலம் போவதை எதிர்த்தனர்.
ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மணமகன் லுஹாரை குதிரையிலிருந்து கீழே இழுத்தனர். நடந்த பிரச்சினையில் சிலர் காயமடைந்துள்ளனர். பின் காவல்துறையின் பாதுகாப்புடன் ஊர்வலம் நடந்ததாகவும் தெரிவித்தனர். மணமகன் அளித்த புகார் பேரில் காவல்துறை கைது செய்துள்ளது. கிராமத்தில் பாதுகாப்புக்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.