மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும் மாயாவதி.
Singrauli: நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) இடஒதுக்கீடு கிடைத்ததற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் நடத்திய போராட்டம்தான் காரணம் என்று அக்கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச தேர்தலில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சிங்ரவ்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது- மத்தியில் வி.பி. சிங் தலைமையிலான ஆட்சி இருந்தபோது, மண்டல் கமிஷன் அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம் நடத்தியது.
ஆனால் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தும் போராட்டத்தை பாஜகவும், காங்கிரசும் எதிர்த்தன. ஒ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு பகுஜன் சமாஜ் கட்சிதான் காரணம்.
சிறுபான்மையினரை வலிமைப்படுத்த உதவும் சட்டங்களை பாஜகவும், காங்கிரசும் நீர்த்துப் போக செய்து வருகின்றன. மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்ததால் வர்த்தகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோடியின் ஆட்சியில் பெட்ரோல் விலை விண்ணை எட்டியுள்ளன. இவ்வாறு மாயாவதி பேசினார்.