ஹைலைட்ஸ்
- OBC-க்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதத்தில் முடிவெடுக்க உத்தரவு
- தீர்ப்பின் முழு விவரங்களும் நண்பகல் இணையத்தில் வெளியிடப்படும்
- தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC-க்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி மூன்று மாதத்தில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது குறித்த தீர்ப்பின் முழு விவரங்களும் நண்பகல் இணையத்தில் வெளியிடப்பட இருப்பதால் மற்ற விவரங்கள் அதில் அறிந்துகொள்ள முடியும் என வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவிகித இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்து 3 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த தீர்ப்பு தமிழக ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த முழுமையான விவரங்கள் தீர்ப்பின் நகல் வெளியான பிறகு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.