உடல் பருமனுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பருவமடைதல் என்ற நிலையை சிறு வயதிலே அடைவார்கள். இதனால் அவர்களின் வளர்ச்சி சிறு வயதிலேயே தடைபடலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது.
ஆய்வின் படி "உடல் பருமன் மற்றும் கூடுதலாக பெல்லி ஃபேட் உள்ள சிறுவர்கள் நான்கு முதல் ஏழு வயதுடையவர்கள் 9வது வயதை தொடும் முன் பருவம் எய்துவிடுகின்றனர். உலகமெங்கும் குழந்தை பருவத்தில் வரும் உடல் பருமன் (ஒபிசிட்டியினால்) முன்கூட்டியே பருவம் எய்தல் என்பது சிறுமிகளிடமிருந்து தொடங்குகிறது. ஆனால் சிறுவர்களைக் குறித்தான சான்றுகள் சர்ச்சைக்குரியதாகின்றன” என்று ஆய்வின் முன்னனி ஆராய்சியாளரான வெரோனிக மேரிக்யூ தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு ENDO 2019ல் வழங்கப்பட்டது. ஐந்து அல்லது ஆறு வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளில் உடல் பருமனுடன் இருப்பவர்கள் முன்கூட்டியே பருவமடைவதற்கான வாய்ப்பு 2.7 மடங்கு அதிகமாகவே இருந்தது. கூடுதலாக உள்ள பெல்லி ஃபேட் 6.4 மடங்கு அதிகமாக இருந்தால் 9 வயதுக்கு முன்பே சிறுவர்கள் பருவமெய்து விடுகின்றனர்.
முன்கூட்டியே பருவம் எய்துவதால் வளர்ச்சி தடைபடுவதுடன், சமூக உணர்வுகளை எதிர்கொள்வதில் சிக்க மற்றும் மனச்சோர்வும் அதிகரிக்கிறது. மேலும் விரைசிரைப் புற்றுநோய் ஏற்படும் அபயங்களும் அதிகம். ஒபிசிட்டியைக் குறைத்தால் இந்த பிரச்னைகளை வெகுவாக குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)