Global Warming Effects: கடற்கரையோர பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. பனிப்பாறைகள் உருகுவதால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்பட்டு வருகிறது.
Washington: உலக வெப்பமயமாதல் அதிகமாகி வருவதாகவும், பருவநிலை மாற்றம் தற்போது அதிகமாகியுள்ளதாகவும் ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. ஜர்னல் சயின்ஸ் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி "கடல்கள் அதிகமான பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்கின்றன. 1960களில் இருந்ததைவிட கடல்பரப்பு அதிக வெப்பமயமாதலுக்கு உட்பட்டுள்ளது" என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.
கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கணக்கிட ஐநா முடிவு செய்து, பருவநிலை மாற்றங்களை 2014ம் ஆண்டு முதல் கண்காணிக்க துவங்கியது.
இந்த புதிய ஆய்வில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு, கடலை கண்காணிக்கும் அர்கோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள 3000க்கும் அதிகமான ரோபோக்கள் கடலின் வெப்பநிலை, உப்புத்தன்மை, வளங்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யும்.
ஆராய்ச்சியாளர்கள், வெப்பநிலையை ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் உலக அளவில் கடலின் வெப்பநிலை அதிகரிப்பது தெரியவந்துள்ளது. ''கடல்தான் பருவநிலை மாற்றத்தின் நினைவகம், 93 சதவிகித ஆற்றல் சமநிலை நிறைவுபெறுவது கடலில் தான்" என்று அமெரிக்க தேசிய காலநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக வெப்பமயமாதல், 2018ல் அதிகாமாக இருந்தது. 2018ம் ஆண்டு தான் உலகின் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. 2015,2017 ஆகிய ஆண்டுகளின் அதிக வெப்பமயமான வருடம் என்பதை இந்த ஆண்டு தாண்டியுள்ளது.
கடற்கரையோர பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. பனிப்பாறைகள் உருகுவதால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்பட்டு வருகிறது. சமீபத்திய சூறாவளி மற்றும் புயலுக்கு காலநிலை மாற்றங்களே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையை சரி செய்ய மனிதர்கள் 10 ஆண்டுகள் கடுமையான நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.