Read in English
This Article is From Jun 09, 2020

ஒடிசா, கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Weather Forecast Today: தென்மேற்கு மற்றும் மேற்கு-மத்திய அரேபிய கடல், தெற்கு மற்றும் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசும்.

Advertisement
இந்தியா

ஒடிசா, கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் (Representational)

New Delhi:

ஒடிசா, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒடிசா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஆந்திர பிரதேச கடலோர பகுதிகள் மற்றும் யானாம், கேரளா மற்றும் மாகே, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மனிப்பூர், மிசோரம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

மேலும், தென்மேற்கு மற்றும் மேற்கு-மத்திய அரேபிய கடல், தெற்கு மற்றும் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசும் என்றும் (மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் வீசும்) என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆந்திரா கடற்கரையிலும் வெளியேயும் "மோசமான வானிலை" ஏற்பட்டுள்ளதாகவும், காற்றின் வேகம் 40-50 கி.மீ வேகத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement
Advertisement