ஒடிசாவில் ஒருவர் தனது 7வயது மகளின் உடலை சுமந்து கொண்டு 8கி.மீ நடந்து சென்றுள்ளார்.
Bhubaneswar: வியாழனன்று புயல் தாக்கிய மாவட்டமான கஜபதியில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது மகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தோளில் தூக்கிக் கொண்டு 8கி.மீ நடந்துள்ளார்.
இச்சம்பவத்தை உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பின. மேலும் கடந்த 2016ம் ஆண்டு இறந்த தனது மனைவியின் உடலை தூக்கிக் கொண்டு 10கி.மீ நடந்து சென்ற சம்பவத்தை இது நினைவு படுத்தியது.
கஜபதி மாவட்டத்தில் லக்ஸ்மி கிராம பஞ்சாயத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. முகுந்த் டோரா என்பவர் தனது மகள் பபிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சாக்கில் கட்டிக் கொண்டு நடந்துள்ளார்.
அக்.11ஆம் தேதி அச்சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை கூறினார். டிட்லி புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிறுமி மாயமனார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அச்சிறுமியின் தந்தை கூறுகையில், புதனன்று மதியம் நுல்லா பகுதியில் எனது மகளின் சடலத்தை கண்டுபிடித்தோம். போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம் அவர்கள் இன்று காலையில் வந்து சடலத்தை படம் எடுத்து சென்றனர். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க போலீசார் எந்த உதவியும் செய்யவில்லை. சடலத்தை மருத்துவமனைக்கு வர சொல்லிவிட்டு மட்டும் சென்றனர்.
வாடகைக்கு வண்டி அமர்த்தி கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு சடலத்தை கொண்டு செல்ல என்னிடம் வசதி இல்லை. மருத்துவமனைக்கு செல்லும் சாலையும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சடலத்தை சாக்கில் கட்டிக் தோளில் போட்டுக் கொண்டு நடந்து சென்றேன் என்று கூறினார்.
ஒடிசாவின் அன்குல் மாவட்டத்தில் வசிக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புயலால் பாதிக்கப்பட்ட கஜபதி மற்றும் கன்ஜம் மாவட்டத்தினை வியாழனன்று பார்வையிட்டார். அவர் இச்சம்பவம் குறித்து பேசுகையில், பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற அவலக் காட்சியை பார்க்கும் போது மிகுந்த வேதனை அளிப்பதாக கூறினார்.