This Article is From Dec 17, 2018

ஒடிசா, திரிபுராவுக்கு புயல் நிவாரண நிதியாக ரூ. 1,292 கோடி ஒதுக்கீடு

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிவாரண நிதி குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா, திரிபுராவுக்கு புயல் நிவாரண நிதியாக ரூ. 1,292 கோடி ஒதுக்கீடு

பருவமழையின்போது நிலச்சரிவு ஏற்பட்டதால் திரிபுரா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

New Delhi:

புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 1,292 கோடியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில்தான் புயல் நிவாரண நிதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ரூ. 1,023 கோடியும், திரிபுரா மாநிலத்திற்கு ரூ.268 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய வல்லுனர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அளித்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் புயல் நிவாரணம் வழங்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
 

.