இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
சொர்க்கம் செல்ல மாட்டாய் என்று கூறிய பாதிரியாரை குண்டுப் பெண் ஒருவர் மேடையில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். பொதுமக்கள் 50 ஆயிரம் பேர் முன்னிலையில் நடந்த இந்தக் காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பாட்ரே மார்சிலே ரோஸி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கீழே தள்ளி விடுவதற்கு முன்பாக பாதிரியார் 'இந்தக் கைகள் எனக்கு சொந்தமானவை அல்ல. பாவிகள், பலவீனமாவர்கள் ஆனால் இந்த கைகள் ஜீசசுக்கு சொந்தமானவை' என்று கூறிக் கொண்டிருந்தார்.
7 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர். விசாரணையில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த பின்னர் 32 வயதான பெண் கைது செய்யப்பட்டார். தன் மீதான புகார்களை பாதிரியார் மறுத்திருக்கிறார்.
Click for more
trending news