Read in English
This Article is From Mar 15, 2019

நடுக்கடலில் தத்தளித்தவரின் உயிரைக் காப்பாற்றிய ஜீன்ஸ் பேன்ட்!!

ஜீன்ஸ் பேன்ட் மட்டும் இல்லாவிட்டால் கடலில் மூழ்கி உயிர் விட்டிருப்பேன் என்று, தப்பித்து வந்த ஆர்னே முர்கே தெரிவித்துள்ளார்.

Advertisement
விசித்திரம் Edited by

ஜெர்மனை சேர்ந்த ஆர்னே முர்கேவின் உயிரை ஜீன்ஸ் பேன்ட் காப்பாற்றியுள்ளது.

நியூசிலாந்து கடலில் தத்தளித்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆர்னே முர்கே என்பவரை அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்ட் காப்பாற்றி கரை சேர்த்துள்ளது. 

30 வயதாகும் ஆர்னே தனது சகோதரருடன் நியூசிலாந்து கடல் பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பயங்கர காற்று வீசியதால் படகு தலை குப்புற கவிழ்ந்தது. இதில் ஆர்னேவின் சகோதரர் தப்பித்துக் கொள்ள, ஆர்னே மட்டும் நடுக்கடலில் தத்தளித்தார். 

அவருக்கு லைஃப் ஜாக்கெட்டுகளை சகோதரர் வீசினார். இதனை ஆர்னேவால் எடுக்க முடியவில்லை.
 

 
 

இந்த இக்கட்டான சூழலில், அதிர்ஷ்டவசமாக திடீரென்று அவரது மூளையில் நல்ல ஐடியா உதித்தது. இதன்படி ஜீன்ஸ் பேன்டின் கால் பக்கத்தில் முடிச்சுகளைப் போட்ட ஆர்னே, அதனை தண்ணீருக்குள் அழுத்து அதில் காற்று புகும்படி செய்தார். 

இந்த ஜீன்ஸ் பேண்டானது, லைஃப் ஜாக்கெட்டை போல செயல்பட்டது. இதனைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்றரை மணி நேரத்திற்கு நடுக்கடலில் ஆர்னே மிதந்தார். பின்னர் வந்த நியூசிலாந்து மீட்பு குழுவினர், ஆர்னே ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு கரை சேர்த்தனர். 

Advertisement

தன்னைக் காப்பாற்றிய ஜீன்ஸ் பேன்டுக்கு நன்றி என்று உற்சாகம் ததும்ப கூறியுள்ளார் ஆர்னே. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement