Read in English
This Article is From Jul 16, 2019

வேட்டையாடிய சிங்கத்தின் முன்பு முத்தமிட்டுக் கொண்ட இளம்ஜோடி! குவியும் கண்டனம்!!

தென்னாப்பிரிக்காவில் மிருகங்கள் வேட்டையாடப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
விசித்திரம் Edited by

இந்த பதிவுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வேட்டையாடும் போட்டி ஒன்றில் பங்கேற்ற கனடாவை சேர்ந்த இளம்ஜோடி தாங்கள் வேட்டையாடிய சிங்கத்தின் அருகே முத்தமிட்டுக் கொண்டார்கள். இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக தென்னாப்பிரிக்காவில் சபாரி எனப்படும் காட்டுச் சுற்றுலா மற்றும் மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கனடாவை சேர்ந்த தம்பதிகள் டேரன் மற்றும் கார்லோன் கார்ட்டர் என்ற ஜோடி பங்கேற்று சிங்கம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. பின்னர் அதற்கு பின்பாக இருந்து முத்தமிட்டவாறே புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டது. இதனை சுற்றுலா நிறுவனமான லெகிலிலா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.

Advertisement

இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்ப்புகள் வலுவடைந்ததை தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தை முடக்கியுள்ளது அந்த நிறுவனம்.

Advertisement