சதர்ன் ப்ளாக் ரேசர் வகையை சேர்ந்த பாம்பு, விஷம் அற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் பயணி ஒருவரின் பேக்கில் பதுங்கிய கருப்பு நிறப்பாம்பு புளோரிடாவில் இருந்து ஹவாய்க்கு இலவச விமானப் பயணம் சென்றுள்ளது.
அதிக லக்கேஜ்களை கொண்டு சென்ற அமெரிக்க பயணி ஒருவரின் பைக்குள் பாம்பு புகுந்து கொண்டது. அவர் புளோரிடாவில் இருந்து ஹவாய்க்கு சென்றார். அங்கிருந்து தனது வாடகை வீட்டிற்கு புறப்பட்டார்.
விமான நிலைய சோதனையில் அந்தப் பாம்பு சிக்கவில்லை. வாடகை வீட்டை அடைந்த பின்னர், வீட்டின் உரிமையாளரிடம் பணம் கொடுப்பதற்காக தனது லக்கேஜ்களை திறந்துள்ளார். அப்போது அதில் இருந்து கருப்பு நிறப் பாம்பு வெளியே வந்தது.
இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாம்பு ஹவாய் வேளாண் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில் பாம்பு ஃப்ளோரிடாவில் இருந்து பயணமாகி வந்தது தெரியவந்தது. இது கருப்பு நிற ரேசர் வகையை சேர்ந்தது என்றும், இதற்கு விஷம் கிடையாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Click for more
trending news