This Article is From Jan 21, 2019

''படத்தை அதிகாரப்பூர்வமாக தமிழ் ராக்கர்ஸுக்கு விற்று விடலாம். '' - எஸ்.வி. சேகர் அதிரடி

தமிழ்த் திரையுலகிற்கு நீண்ட நாட்களாகவே தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம் தலைவலி அளித்து வருகிறது. எந்தவொரு நடிகரின் படம் திரைக்கு வந்தாலும், அதேநாளில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் அந்தப்படம் அப்லோட் செய்யப்படுகிறது.

Advertisement
தமிழ்நாடு Posted by


தொழில்நுட்பம் வளர்ந்துள்ள கால கட்டத்தில் புதுப்படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தை குற்றம் சொல்ல முடியாது என்று நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகிற்கு நீண்ட நாட்களாகவே தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம் தலைவலி அளித்து வருகிறது. எந்தவொரு நடிகரின் படம் திரைக்கு வந்தாலும், அதேநாளில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் அந்தப்படம் அப்லோட் செய்யப்படுகிறது.

சில சமயம் திரைக்கு வருவதற்கு முன்பாக தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் செய்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு புதுப்படமும் வரும்போது, அதனை இணைய தளங்களில் வெளியிடக் கூடாது என்ற உத்தரவை நீதிமன்றம் மூலம் தயாரிப்பாளர் தரப்பு பெற்று வருகிறது.

தொடர்ந்து முடக்கப்பட்ட போதிலும், இணைய தள முகவரியில் சில வார்த்தைகளை மாற்றி பீனிக்ஸ் பறவையாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செயல்படுகிறது. இந்த நிலையில், பைரசி ஒழிப்பது தொடர்பாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

Advertisement

தமிழ் ராக்கர்ஸை குறை சொல்வதில் எந்தவொரு அர்த்தமும் கிடையாது. விஞ்ஞான வளர்ச்சி வந்து விட்டது. உலகில் உள்ள அனைவரையும் போட்டோகிராஃபர்களாக செல்ஃபோன் மாற்றி விட்டது. அதற்காக பெரிய கேமராக்களை விற்று விட முடியுமா? அல்லது யாரும் ஃபோட்டோ எடுக்க கூடாது. அப்படி செய்தால் அரெஸ்ட் செய்வோம் என்று சொல்ல முடியுமா?

படத்தை அதிகாரப்பூர்வமாகவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு விற்று விடலாம். அங்கேயே முதல் நாளில் படம் வெளியாகட்டும் என்று கூறியிருந்தார். 

Advertisement
Advertisement