கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளிலும் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கினால், கொள்ளிடத்தில் கட்டப்பட்டுள்ள பழைய பாலம், சேதம் அடைந்துள்ளது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள அந்த பாலத்தை, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜம் பார்வையிட்டார்.
வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை குறித்து பார்வையிட்ட அவர், பின் செய்தியாளர்களிடம் பேசினார். “ பழைய கொள்ளிடம் பாலம், சேதம் அடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல பாலம் பாதுகாப்பானதாக இல்லை. எனவே வெள்ளம் வடிந்த உடன் இந்த பாலம் இடிக்கப்படும்” என்றார்.
புதிய பாலத்தில் போக்குவரத்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். சேதமடைந்துள்ள பழைய பாலம், 1920-ம் ஆண்டு கட்டப்பட்டது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)