"ட்ரம்பை விட சிறந்த தலைவர்தான் அமெரிக்காவுக்கு தேவை" என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
Washington: அமெரிக்க வாழ் இந்தியரான கமலா ஹாரிஸ், அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர்தான் அமெரிக்க வாழ் இந்தியர்களில் செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர். சிஎன்என் தொலைக்காட்சிக்கு இவர் அளித்துள்ள பேட்டியில் "ட்ரம்ப்பின் சுவர் எழுப்பும் முடிவு மக்களை கடும் பாதிப்புக்குள்ளாக்குகிறது" என்று கூறியுள்ளார்.
"அதிபரின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக 8 லட்சம் அரசு அலுவலர்களை வேலைக்கு போகாமல் இருக்க சொல்வது நியாயமற்ற செயல்" என்று குறிப்பிட்ட அவர் இதனை தவறான முடிவு என்றும் விமர்சித்துள்ளார்.
புலம் பெயர்ந்தவர்களாக அவர்களின் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது. அமெரிக்காவை எப்படி நேசிக்கிறோம் என்பது பற்றி பேசிய கமலா ஹாரிஸ், இந்த ட்ரம்ப் அரசாங்கத்தில் புலம் பெயர்ந்தவர்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தப் பேட்டியில் "ட்ரம்ப்பின் சுவர் கட்டும் முடிவு என்பது, 11 வயதாகும் என்னுடைய பேரன் அவனுடைய பொம்மைகளுக்கு அடம்பிடிப்பதை போன்றுள்ளது" என்று விமர்சித்தார். "இதை ஜனநாயக கட்சி ஒருபோதும் ஏற்காது" என்றார்.
ஆனால் ட்ரம்ப், "யார்தடுத்தாலும் சுவர் வரும், அதற்கு ஒத்துழைப்பு தராவிட்டால் எமெர்ஜென்ஸி வரும்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.