This Article is From Aug 16, 2018

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 11 இளைஞர்கள் - வீடியோவில் பதிவான காட்சிகள்

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடல் படை, எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்

Bhopal:

மத்திய பிரதேச மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்தில், நீர் வீழ்ச்சியில் குளித்த 11 இளைஞர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் பிரபலமான சுற்றுலா தளம் சுல்தான்கர் நீர் வீழ்ச்சி.

நேற்று சுதந்திர தின விடுமுறையை கொண்டாட அங்கு சென்ற 11 பேருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அருவியின் ஒரு பகுதியில் பலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளம் அதிகரித்ததால், 45 பேர் மட்டும் அருகில் இருந்த பாறையில் சிக்கித் தவித்தனர். அதில் 11 பேரைத் தவிர மற்ற அனைவரும் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிலரால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், நீர்வீழ்ச்சியின் நடுவில் உள்ள ஒரு பாறையில், சிலர் கூட்டமாக சிக்கி நிற்கின்றனர். திடீரென அதிகரிக்கும் வெள்ளம், அவர்களில் சிலரை அடித்துச் செல்கிறது.

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடல் படை, எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது.

மீட்புப் பணிகளுக்கு உடனடியாக உதவி செய்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹன் நன்றி தெரிவித்தார்.

 

.