அந்த மனிதன் கடைசியில் கதவைத் திறந்து தப்பித்தாலும், காவல்துறையிடம் பிடிபட்டு விட்டார்
சீனாவில் ஏடிஎம் கொள்ளை ஒன்று தோல்வி தழுவியது. இந்நிகழ்வு அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. ஏடிஎம்மில் திருடன் முயற்சித்தபோது கதவு பூட்டிக் கொண்டது. பீதியடைந்த திருடன் கதவை எப்படி திறக்க வேண்டும் என்பதை மறந்து விட்டான். ஷாண்டோங் நகரில் உள்ள ஏடிஎம் அறையில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் அந்த நபர் உள்ளே நுழைவதைக் காட்டுகிறது. தானியங்கி குரலின் செய்தியின் சத்தத்தில் உடனடியாக திடுக்கிடுவதைக் காணலாம்.
கதவு பூட்டப்பட்டதும் சில நொடிகளில் அந்நபர் அதை திறக்க முயன்றார்.
பீதியடைந்த திருடன், ஏடிஎம்மை உலோகத் தட்டில் கதவை தாக்கத் தொடங்குகிறார். இந்த வீடியோவை கீழே காணலாம்.
ஷாங்காயிஸ்டின் செய்தியின்படி, பெயரிடப்படாத திருடன் கதவை உடைக்க முயற்சிக்கவில்லை. ஏடிஎம் அலாரத்தை நிறுத்தியதை தவிர ஏதும் செய்யவில்லை. அந்த மனிதன் கடைசியில் கதவைத் திறந்து தப்பித்தாலும், காவல்துறையிடம் பிடிபட்டு விட்டார்.
ஒரு திருடன், மாட்டிக் கொண்டு தடுமாறும் காட்சி இணையத்தில் வெகுவாக பரவியுள்ளது.
Click for more
trending news