இந்தியா - சீனா எல்லை அருகே லாரியின் எடை தாங்காமல் உடைந்த பாலம்! வீடியோ
ஹைலைட்ஸ்
- லாரியின் எடை தாங்காமல் உடைந்த பாலம்
- லாரி ஓட்டுநரும், எந்திர ஆப்பரேட்டரும் மருத்துவமனையில் அனுமதி
- புதிதாக பாலம் கட்டுவதற்கு 15 நாட்கள் ஆகும்
Dehradun: உத்தரகாண்டில் இந்தியா - சீனா எல்லை அருகே உள்ள பெய்லி பாலத்தில் லாரியின் எடை தாங்காமல் பாலம் உடைந்து விழுந்துள்ளது.
இதுதொடர்பாக முன்ஸயாரி துணை வட்டாட்சியர் ஏ.கே.சுக்லா கூறும்போது, லாரி ஓட்டுநரும், எந்திர ஆப்பரேட்டரும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். 40 அடி நீளமுள்ள அந்த பாலம் 2009ல் கட்டப்பட்டுள்ளது. லாரியின் எடையையும், ராட்சத எந்திரத்தின் எடையையும் ஒரு சேர தாங்காமல் பாலம் விழுந்துள்ளது.
அந்த பாலத்தின் எடை தாங்கும் திறனானது, 18 டன் ஆகும். ஆனால், அந்த ராட்சத எந்திரம் மற்றும் லாரியின் எடையை சேர்த்து 26 டன் வரும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநரும், எந்திர ஆப்பரேட்டரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஜோஹர் பள்ளத்தாக்கின் சுமார் 15 எல்லை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், லாரி ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, புதிதாக பாலம் கட்டுவதற்கு 15 நாட்கள் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.